ரொம்ப நாட்களாக ஒரு பொம்மை வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். பல இடங்களில் கேட்டும் சரியாக அமையவில்லை. அது சிங்கம் புலி என மிருகங்களின் சின்ன வடிவங்கள். கடைசியாக ஒரு இடத்தில் கிடைக்கவும் வாங்கிக்கொண்டு வந்து வீட்டு தரையில் எல்லா மிருகங்களையும் நிறுத்தி வைத்துவிட்டு பாப்பாவை அழைத்து வந்து காட்டினோம். அவள் ஏதோ கத்திக்கொண்டே பக்கத்தில் சென்று விட்டு எங்களை பார்த்து சிரித்தாள். திரும்பவும் அதை பார்த்துவிட்டு எங்கள் முகத்தை பார்த்து சிரிக்கிறாள். அவளுக்கு ஏதாவது பிடித்திருந்தால் இப்படி தான் முகத்தை பார்த்து சிரிக்கிறாள். சில சமயம் கையை வாயில் வைத்து முத்தம் கொடுக்கிறாள். அன்று ஒருநாள் மைதானத்தில் கட்டியிருந்த மாட்டை காட்டினேன். இப்படி தான் முகத்தை பார்த்து சிரித்தாள். நேற்று ரூபலா அவளுக்காக செருப்பு ஒன்னு வாங்கி வந்தாள். அப்பொழுதும் இப்படி தான் சிரித்தாள். அந்த சிரிப்பு ஒன்று போதும். அத்தனை கஷ்டங்களும் சில நிமிடங்கள் மறந்திருக்க.
– அப்பா
18/07/22